மருதையாற்றில் புதிய கட்டுமானப் பணி துவக்கம்- தமிழக அரசுக்கு பொதுமக்கள் நன்றி

அரியலூர் அருகே மருதையாற்றில் பாலம் கட்டுவதற்கான பணி தொடங்கப்பட்டு இருப்பதற்கு அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

அரியலூர் அருகே வாரணவாசி கிராமம் அருகே மருதையாறு செல்கிறது. இங்குள்ள பாலம் கட்ட முடிக்கப்பட்டு 50 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டதால் ் வலுவிழந்துள்ளது. அடிக்கடி போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் புதிய பாலம் கட்ட கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து அரியலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக கொறடாவுமான ராஜேந்திரன் தமிழக அரசிடம் எடுத்துரைத்தார். இதையடுத்து, 12 கோடி ரூபாய் மதிப்பில் புதிய பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து, மருதையாற்றின் குறுக்கே பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

Exit mobile version