சபரிமலையில் தரிசனத்திற்கு, ஆன்லைனில் முன்பதிவு செய்பவர்கள் ஆதார் எண் உள்ளிட்ட விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற புதிய நிபந்தனையால் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சபரிமலை கோவில் தரிசனத்துக்கு கடந்த சில ஆண்டாக ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது. இந்தாண்டு முன்பதிவுக்கு தேவசம்போர்டு சில நிபந்தனைகளை விதித்ததுள்ளது. நிலக்கல்லில் இருந்து பம்பை வரை, கேரள அரசு பேருந்தில் செல்ல டிக்கெட் முன்பதிவு செய்தால் மட்டுமே சுவாமி தரிசனத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் என்றும் கூறியுள்ளது.
கடந்தாண்டு வரை, 5 பேருக்கு ஒருவரின் ஆதார் எண், பிற அடையாள அட்டை வைத்திருந்தால் போதும் என்ற நிலையில், தற்போது அந்த குழுவில் பயணம் செய்யும் அனைவரின் ஆதார் எண், அடையாள அட்டை உள்ளிட்ட பல்வேறு விபரங்கள் கேட்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த பக்தர்கள் ஆன்லைனில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் பக்தர்களுக்கு சிரமத்தை கொடுத்துள்ளதாகவும். இந்த குளறுபடிகளை சரி செய்ய தேவசம்போர்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.