ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தஞ்சை பழைய பேருந்து நிலையம், புதிதாக கட்டப்படுவதையடுத்து, தற்போது உள்ள பேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது தொடர்பாக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தின் கீழ் தஞ்சை ஜெபமாலைபுரம் குப்பைக் கிடங்கை மாற்றுவது, மாநகரில் 14 இடங்களில் திடக்கழிவு மேலாண்மை அமைப்பது, தஞ்சை பழைய பேருந்து நிலையம் மற்றும் திருவையாறு பேருந்து நிலையத்தை இடித்து விட்டு புதிதாக கட்டுவது என பல்வேறு பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன. தற்போது உள்ள பழைய பேருந்து நிலையத்தை, புதிதாக கட்டி முடிக்கும் வரை தற்காலிகமாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்வது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரசின் இந்த முயற்சிக்கு பொதுமக்களும், வியாபாரிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.