மத்திய பிரதேசத்தை தொடர்ந்து சத்தீஸ்கரில் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஷ்கார் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வாக்குறுதி அளித்து இருந்தார். அதன்படி, மத்தியபிரதேச முதமைச்சர் கமல்நாத், விவசாய கடன்களை ரத்து செய்தார். இதனைத் தொடர்ந்து சத்தீஷ்கார் முதலமைச்சர் பூபேஷ் பாகேலும், 6 ஆயிரத்தி 100 கோடி ரூபாய், விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன் மூலம், 16 லட்சத்து 65 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.