மத்திய தகவல் ஆணையத்தின் புதிய தலைமை ஆணையராக சுதிர் பார்கவா என்பவரை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் கேட்கப்படும் அரசு தொடர்பான தகவல்களை, மத்திய தகவல் ஆணையம் வழங்கி வருகிறது. மேல்முறையீட்டு அமைப்பாகவும் விளங்கும் இந்த மத்திய தகவல் ஆணையத்தில் பல்வேறு ஆணையர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, புதிதாக 4 தகவல் ஆணையர்களை மத்திய அரசு நியமித்தது.இதேபோல் தலைமை தகவல் ஆணையர் பதவியும் காலியாக இருந்தது. இதற்காக ஆன்லைன் மூலம் 65 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் புதிய தலைமை தகவல் ஆணையராக சுதிர் பார்கவா இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.