ஜெர்மன் நிதியுதவியுடன், தமிழகத்தில் புதிய பேருந்துகள்

ஜெர்மன் வங்கியுடன் இணைந்து தமிழகத்தில் போக்குவரத்துத் துறையை மேம்படுத்துவதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் திட்ட உடன்பாடு கையொப்பமானது.

2019 – 2020ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், ஜெர்மன் வளர்ச்சி வங்கியின் நிதியுதவியுடன் 5 ஆயிரத்து 890 கோடி ரூபாய் மதிப்பில் 12 ஆயிரம் புதிய BS-6 தரத்திலான பேருந்துகளையும், 2 ஆயிரம் மின்சாரப் பேருந்துகளையும் வாங்கிப் பயம்ன்படுத்தும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக ஆயிரத்து 580 கோடி ரூபாய் மதிப்பில் BS-6 தரத்திலான 2ஆயிரத்து 213 புதிய பேருந்துகள், 500 மின்சாரப் பேருந்துகள் வாங்குவதற்கான திட்ட ஒப்பந்தம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறைக்கும், ஜெர்மன் வளர்ச்சி வங்கிக்கும் இடையே கையொப்பமானது. நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version