தென்காசி அருகே விளை நிலங்களுக்கு செல்வதற்கு பாலம் திறக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்
நெல்லை மாவட்டம், கீழப்பாவூர் ஒன்றியம் அருகே உள்ள தாயார்தோப்பு பகுதியில் 600-க்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாய நிலம் அமைந்துள்ளன. இங்கு விவசாய நிலங்களுக்கு செல்ல, கால்வாய் ஒன்றை கடந்து செல்லும் நிலை இருந்து வந்தது. விளை பொருட்களைக் கொண்டு செல்வதிலும், மருந்துகள் கொண்டு செல்வதிலும் விவசாயிகள் சிரமமடைந்தனர். இந்த நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு 17 லட்சம் ரூபாய் செலவில் புதிய பாலம் அமைத்து கொடுத்தது. இந்த புதிய பாலத்தை தென்காசி சட்டப்பேரவை உறுப்பினர் செல்வமோகன்தாஸ் திறந்து வைத்தார்.