புதிய பாடத்திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்கி செல்கின்றனர்.
தமிழகத்தில் பழைய பாடத்திட்ட முறை மாற்றி அமைக்கப்பட்டு புதிய பாடத்திட்ட முறை கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த கல்வியாண்டில் 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து எஞ்சியுள்ள 7, 8,10,12 உள்ளிட்ட வகுப்புகளுக்கான பாடத்திட்டம் மாற்றி அமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்காக பாட புத்தகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. நுங்கம்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு பாடநூல் கழகத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து பெற்றோர்கள் புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.
2,3,4,5 மற்றும் 7 ஆகிய வகுப்புக்களுக்கான புதிய பாடப்புத்தகங்கள் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு வரவுள்ளதாக பாடநூல் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது