பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் அஞ்சபோவதில்லை – இந்தியா

பாகிஸ்தானின் மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சப்போவதில்லை என்று, கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரி எம்.எம்.நாராவனே தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதையடுத்து, பாகிஸ்தான் கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. ஜி 7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இது இரு நாடுகளின் பிரச்சினை என்றும், 3 வது நாட்டின் தலையீட்டுக்கு எந்த அவசியமுமில்லை என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக இந்தியாவுடன் அணுகுண்டு போர் வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து, அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமதுவும் இதே மிரட்டலை விடுத்துள்ளார். இதை தொடர்ந்து, பாகிஸ்தான் வான் எல்லைகளில் இந்திய விமானங்கள் பறக்க முழுவதும் தடை விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனிடையே, பாகிஸ்தான் மிரட்டல்களுக்கு ஒருபோதும் இந்தியா அஞ்சப்போவதில்லை என்று இந்திய கிழக்கு பிராந்திய ராணுவ அதிகாரி எம்.எம். நாராவனே தெரிவித்துள்ளார்.

Exit mobile version