நீட் தேர்வு விவகாரத்தில் அம்பலமான திமுகவின் பித்தலாட்டம், சமூக வலைதளங்களில் வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

மாணவர்களே… நாங்கள் இருக்கிறோம்… கலங்காதீர்கள் என்று நீட் தொடர்பாக கடந்த வருடம் ட்வீட் செய்த ஸ்டாலினை, நெட்டிசன்கள் சமூக வலைதலங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.

தேர்தலின்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் பொய்வாக்குறுதி அளித்து மாணவர்களை ஏமாற்றியது ஒருபுறமிருக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஸ்டாலின் பதிவிட்ட டிவிட்டர் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

அதில், மாணவர்களே தைரியமாக இருங்கள், உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம் எனவும், நீட் தேர்வை ரத்து செய்ய எந்தப் போராட்டத்தையும் தி.மு.க. செய்யும் எனவும் ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 

 

நீட் தேர்வால் வாய்பிழந்தவர்களுக்கு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்படும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஸ்டாலினின் ட்விட்டை சுட்டிக்காட்டி தற்போது சமூக வலைதலங்களில், நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

இதேபோன்று தேர்தலின்போது, நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என வாய்கிழிய பேசிய உதயநிதி ஸ்டாலினுக்கும் கண்டனங்கள் வலுத்து வருகின்றனர்.

 

நீட் தேர்வு அச்சத்தால் மாணவன் தற்கொலை செய்துகொண்டநிலையில், தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதி என்னவானது என சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இதையடுத்து உதாரு விட்ட உதய் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதுதொடர்பான பல்வேறு மீம்ஸ்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன….

 

Exit mobile version