"மணி ஹெய்ஸ்ட்" தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது – "வாத்தி" is Back!!!

உலகப் புகழ் பெற்ற “மணி ஹெய்ஸ்ட்” தொடரின் சீசன் 4 இன்று Netflix இணைய தளத்தில் வெளியானது. இணையதள ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் ஒரு தொடர் “மணி ஹெய்ஸ்ட்”. ஒரு கொள்ளை சம்பவத்தை பின்புலமாக வைத்து மிக சுவாரஸ்யமாக பின்னப்பட்ட திரைக்கதை, நமக்கு திரைவிருந்தாக அமைவது தான் இத்தொடர். இது ஒரு ஸ்பானிஷ் இணையதள தொடர், மூளைக்கு வேலை கொடுத்து நம்மை யோசிக்க வைத்து நாம் இதுதான் அடுத்த காட்சியாக இருக்கும் என யூகிக்கும் போது டைரக்டர் அங்கு நிகழ்த்தும் ஒரு அற்புதம் நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதுதான் தொடரின் மிகப்பெரிய பலம். எல்லா கொள்ளை சம்பவத்திற்கும் சரியான திட்டமிடல், தொடர்பில்லாத நிகழ்வுகள், இவை அனைத்தையும் இணைக்கும் ஒரு மையப்புள்ளி professor என தொடரில் எக்கச்சக்க டிவிஸ்டுகள். இதைவிட த்ரில்லர் கதைகளுக்கு வேறென்ன வேண்டும், அந்த மந்திரத்தை இயக்குனர் திறம்பட கத்து வைத்து நம்மை கட்டிபோட்டு விடுகிறார். இதற்கு முன் வெளியான 3 சீசங்களும் செம ஹிட். கடந்த சீசனில் 34மில்லியன் ரசிகர்கள் இந்த தொடரை பார்த்து குதூகளித்தனர். இவ்வளவு பெரிய ரசிகர் கூட்டத்தை கொண்ட ஒரு தொடரின் 4 வது சீசன் வெளிவருகிறது என்றால், அதன் எதிர்ப்பார்ப்பு எவ்வளவு இருக்கும் என்பதற்கு ஒரு சின்ன உதாரணம், கொரோனா தாக்கத்தையும் தாண்டி இணையதளங்களில் வைரலாகும் இது குறித்த செய்திகள், இதுதான் இப்போது வைரல் டிரெண்டிங்.

கொரொனாவுக்கு மருந்து இருக்கிறதா இல்லையா என்பதை விட இந்த தொடரில் என்ன இருக்கும் என்பதுதான் இப்போதைக்கு ரசிகர்களுக்கு மண்டையை குடையும் ஒரு கேள்வி. கடந்த மார்ச் 5ஆம் தேதி வெளியான சீசன் 4 இன் டிரெய்லர் ரசிகர்களிடையே பெருத்த வரவேற்பை பெற்றது. அதில் டோக்கியோ professor தனது சுயநினைவை இழந்துவிட்டார் என சொல்வது போல் மெதுவாக ஆரம்பிக்கும் காட்சிகள், அடுத்தடுத்து நகரும் சண்டை மற்றும் கொள்ளை காட்சிகளால் வேகமெடுக்கிறது. முந்தைய சீசங்களை விட இந்த சீசன் இன்னும் சுவாரஸ்யமாகவே இருக்கும் என்பது டிரெய்லர் பார்த்த ரசிகர்களிடையே ஆர்வத்தை தூண்டியுள்ளது.

இந்திய நேரப்படி, நண்பகல் 12.30 மணிக்கு “மணி ஹெய்ஸ்ட்” சீசன் 4 வெளியானது. கொரோனா பீதியிலிருக்கும் ரசிகர்களுக்கு ஒரு பெரிய ஆறுதலாக இத்தொடர் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

Exit mobile version