நேதாஜியின் கனவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை என்று, பிரதமர் மோடி வேதனை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் ஆசாத் ஹிந்த் சர்க்காரின் 75-வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்திய பிரதமர், நான்கு ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்து இருப்பதாக தெரிவித்தார்.
துல்லிய தாக்குதல் போன்று கடுமையான முடிவுகளை எடுக்கும் சக்தி மத்திய அரசுக்கு இருப்பதாக அவர் குறிப்பிட்டார். அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என்பதில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உறுதி பூண்டு இருந்ததை நினைவு கூர்ந்தார்.
நாட்டை பிரித்தாலும் கொள்கையை களைய அவர் விரும்பியதாகவும், ஆனால் அந்தக் கனவு இன்று வரை நிறைவேற்றப்படவில்லை எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.