காவல்துறையினரையும் விட்டு வைக்காத ''நேசமணி ட்ரெண்டிங்''

நேற்று முன்தினம் முதல் டிவிட்டர் மட்டுமல்ல இந்தியாவில் எங்கே பார்த்தாலும் வடிவேலுவின் காண்ட்ரக்டர் நேசமணி காமெடி காட்சிகள் குறித்த மீம்ஸ்கள் மட்டுமே வைரலாகி கொண்டிருக்கிறது.இரண்டு நாட்களாக இந்திய அளவில் ட்விட்டரில் முதலிடம் பிடித்த நேசமணியின் உடல்நிலை பற்றி நமக்கெல்லாம் கவலை இருந்தாலும் அவர் இந்த சமூகத்திற்கு ஒரு விசயத்தை சொல்லாமல் சொல்லியிருக்கிறார். அது “ஹெல்மெட்” குறித்த அவசியம்.

ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் பலியை தடுக்கலாம் என்ற போக்குவரத்துதுறையின் விதிகளை அவர் இந்த சமூகத்திற்கு உரக்க சொல்லியிருக்கிறார். அன்று ஹெல்மெட் அணியாததே அவரின் இந்த நிலைமைக்கு காரணம். இதனை வலியுறுத்தி தமிழக காவல் துறை சார்பில் “விபத்துகளை தடுக்க தலைக்கவசம் அணிவீர்” என்ற வாசகத்துடன் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் நேசமணி(வடிவேலு) மீது சுத்தியல் விழுவது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. மேலும் கணநேரத்தில் மிகச் சரியாக நேசமணி ட்ரெண்டைப் பயன்படுத்தி காவல்துறையினர் செய்த இந்த விழிப்புணர்வு செயல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

நேசமணியை காப்பாற்றுவதெல்லாம்இருக்கட்டும். அதற்கு முன் தலைக்கவசம் அணிந்து உங்கள் உயிரை காப்பாற்றி கொள்ளுங்கள்….!

Exit mobile version