இன்று வெளியாகிறது நேர்கொண்ட பார்வையின் “அகலாதே” பாடல்

இந்தியில் பெரும் வெற்றிப் பெற்ற “பிங்க்” படத்தின் தமிழ் ரீமேக்கான “நேர்கொண்ட பார்வை” படத்தில் அஜித்,வித்யாபாலன், ரங்கராஜ்பாண்டே, ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை “சதுரங்க வேட்டை”, “தீரன் அதிகாரம் ஒன்று” படங்களின் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

ஏற்கனவே இந்த படத்தின் “வானில் இருள்”, “இடிஎம் சாங்”, “தீ முகம் தான்” ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் அடுத்த பாடலாக “அகலாதே” பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என நேற்றைய தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் படத் தயாரிப்பாளரான போனிகபூர் அறிவித்துள்ளார்.
இந்த பாடல் அஜித்துக்கும், வித்யா பாலனுக்கு இடையேயான காதல் பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version