மலையேற்றத்திற்கு ஏதுவாக எவரெஸ்ட் உள்பட 14 சிகரங்களை திறந்தது நேபாளம்!!

சுற்றுலாத்துறையை மீட்கும் நடவடிக்கையாக எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களை சுற்றுலாவுக்காக திறந்துள்ளதாக நேபாள அரசு அறிவித்துள்ளது.

இமய மலைத்தொடரில் அமைந்துள்ள இயற்கை எழில் கொஞ்சும் நாடான நேபாளத்தில் எவரெஸ்ட் உள்பட 14 உயர் சிகரங்கள் உள்ளன. இந்த சிகரங்களில் மலையேற்றம் பிரபலம். மலையேற்றம் மூலம் பல மில்லியன் டாலர் கணக்கில் வருவாய் மற்றும் வேலைவாய்ப்பை பெற்று வந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் பாதிப்பை சந்தித்தது.

நேபாளத்தில் இதுவரை கொரோனா தொற்றுக்கு 19,547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை.இந்நிலையில் கடந்த வாரம் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதை அடுத்து, தற்போது சுற்றுலா நடவடிக்கைகளுக்காக சிகரங்கள் திறக்கப்படுவதாக சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.

Exit mobile version