நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம்

நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழாவை முன்னிட்டு காந்திமதி அம்பாளுக்கு நெல்லையப்பர் காட்சி கொடுக்கும் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கடந்த 24-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனை தொடர்ந்து, தினந்தோறும் காலையிலும், மாலையிலும் காந்திமதி அம்பாள் நெல்லை டவுனின் நான்கு ரதவீதிகளிலும் வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் ஐப்பசி திருவிழாவின் காட்சி திருநாளான இன்று, நெல்லையப்பர் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஏழுந்தருளினார். முதலில் நெல்லை கோவிந்தராஜ பெருமாள், திருஞான சம்பந்தர் ஆகியோருக்கு கம்பை நதியில் விஸ்வேஸ்வர லிங்கமாகவும், ஜலமாகவும் காட்சியளித்தார். இதனைதொடர்ந்து காட்சி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நெல்லையப்பர் சுவாமி, அம்பாளுக்கு மாலை மாற்றும் நிகழ்ச்சியும், புது வஸ்திரம் சாற்றும் நிகழ்ச்சியும் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version