பெண்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவான விமர்சனம்-பெண் ஊடகவியலாளர்கள் கண்டனம்

“மீ டூ” என்ற தலைப்பில் உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தாங்கள் சந்திக்கும் பாலியல் தொந்தரவுகளை வெளியில் கூறி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் பெண் ஊடகவியலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும் சவால்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

“Unseen” என்ற நூலின் ஆசிரியர் பாஷா சிங், ஊடக சுதந்திரத்திற்கான கூட்டணி ஒருங்கிணைப்பாளர் இந்து என்.ராம் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஊடக நிறுவனங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாகா கமிட்டி அமைக்கவேண்டும், இதுவரை கொடுத்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

பணி உயர்வில் பாலின பாகுபாடு காட்டக்கூடாது, சமூக வலைதளங்களில் பெண்களை குறித்த தரக்குறைவான விமர்சனங்களை தடுக்க வேண்டும், முன்னறிவிப்பின்றி கட்டாய பணி நீக்கத்தை தடுக்க வேண்டும், பெண் ஊடகவியலாளர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க காவல்துறையில் தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Exit mobile version