NEET,JEE பயிற்சி மையங்கள் வரும் 25ம் தேதி முதல் தொடக்கம்

தமிழக அரசு சார்பில் நீட் மற்றும் JEE பயிற்சி மையங்கள் வரும் 25ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. நீட் பயிற்சி பெறுவதற்காக இதுவரை 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழகம் அரசின் இலவச நீட் மற்றும் JEE தேர்விற்கான பயிற்சி மையங்கள், கடந்த செப்டம்பர் முதல் செயல்பட்டுவந்தது, இந்த மையங்களில் நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வந்தது. மார்ச் 1ம் தேதி முதல் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கியதால், மாணவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில், இந்த நீட் பயிற்சியை கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி நிறைவு செய்து பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டது. பொதுத்தேர்வுகள் மார்ச் 22ம் தேதியுடன் முடிவடையவுள்ளதால், மார்ச் 25-ம் தேதியில் இருந்து மீண்டும் நீட் மற்றும் JEE தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 413 மையங்களில் நீட் பயிற்சி பெறுவதற்காக 20 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 4 ஆயிரம் பேருக்கு தங்குமிடம், உணவு ஆகியவை இலவசமாக வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version