கல்லூரியில் சேராத மாணவர்கள் ஒரு வருசத்துக்கு நீட் எழுத முடியாது.. என்னங்க சொல்றீங்க!

517051420

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் இடங்களுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு கலந்தாய்வில் சிறப்பு சுற்றில் இடங்கள் பெற்றூ கல்லூரிகளில் சேராத மாணவர்கள், ஓராண்டுக்கு நீட் தேர்வு எழுத முடியாது என மருத்துவ கலந்தாய்வுக் குழுவான எம்சிசி தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் அரசு மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்லூறிகளில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படுகிறது. இந்த இடங்களுக்கும், எய்ம்ஸ், ஜிப்மர், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய பல் கலைக்கழகங்களில் உள்ள எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்களுக்குமான கலந்தாய்வை மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகமான டி.ஜி.எச்.எஸ் மற்றும் எம்சிசி இணையம் வழியே நடத்தி வருகிறது.

அதன்படி நடப்பு ஆண்டுக்கான கலந்தாய்வு http//mcc.nic.in/ என்ற இணையதளத்தின் வழியாக நேற்று தொடங்கியது. முதல் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 6-ம் தேதி நிறைவடைகிறது. இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 9-ம் தேதியும், மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 31-ஆம் தேதியும், காலி இடங்களை நிரப்புவதற்கான சிறப்பு கலந்தாய்வு செப்டம்பர் 21-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

என்ன என்ன மாற்றங்கள்..!

இந்நிலையில் நடப்பாண்டிற்கான கலந்தாய்வு நடைமுறையில் மூன்று முக்கிய மாற்றங்களை மருத்துவக் கலந்தாய்வுக் குழு மேற்கொண்டுள்ளது. அதன்படி, முதல் சுற்றில் இடங்கள் பெற்றவர்கள், மூன்றாம் சுற்று வரை அதனை மாற்றிக் கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு இரண்டாம் சுற்று வரை மட்டுமே அந்த வாய்ப்பு இருந்தது.

அடுத்ததாக, காலியாக உள்ள இடங்களுக்கான கலந்தாய்வில் ஒதுக்கீடு பெற்று கல்லூரியில் சேராதவர்களுக்கு நீட் தேர்வு எழுத ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட முந்தைய விதிகளில் அது இரண்டு ஆண்டாக இருந்தது.

மூன்றாவதாக, கலந்தாய்வுக்குப் பிறகு காலியாக உள்ள நிகர் நிலைப் பல்கலைக்கழங்களின் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் இடங்கள் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழங்கள் வசமே ஒப்படைக்கப்ப்ட்டு வந்தன. தற்போது அது திருப்பி அளிக்கப்படமாட்டாது என மருத்துவக் கலந்தாய்வுக் குழு தெரிவித்துள்ளது.

Exit mobile version