இனி விடியா ஆட்சியில நீட் ஒழிப்பே கிடையாது!

திமுகவுக்கு ஓட்டு போட்டிங்கன்னா, முதல் கையெழுத்தே நீட்ட ஒழிக்கிறதுதான்னு பொய்வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த விடியா அரசு, 2 வருசத்துக்கு மேல ஆகியும் நீட்ட ஒழிக்க முடியல…. அதனால உயிரிழப்புகள் அதிகரிச்சதும், பொதுமக்கள் கொந்தளிச்சிட்டாங்க. சரி, மக்கள ஏதாவது செஞ்சி மடைமாத்தணும்னு கண்துடைப்புக்கு உண்ணாவிரதம் எல்லாம் இருந்தாங்க. ஆனாலும் இவங்களோட நாடகத்த மக்கள் ஏத்துக்கல… வேறா ஏதாவது செஞ்சி மக்களோட கவனத்த நீட்டுல இருந்து திசை திருப்பணும்னு சனாதனத்துக்கு எதிர்ப்பா பேசி வைக்க, அது ஒருபக்கம் விவாதப் பொருளாகி ஓடிக்கிட்டு இருக்குது.
இந்த சந்தடி சாக்குல, 23-24ஆம் ஆண்டுக்கான, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் அரசு பள்ளிக்கூடங்கள்ல தொடங்கும்னு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவிச்சிருக்காரு. இது மாணவர்கள் மத்தியில பெரும் அதிருப்தியையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கு. அப்ப இந்த கல்வியாண்டுலயும் நீட்ட ரத்து செய்யமாட்டோம்னுதான், கோச்சிங் கிளாஸ தொடங்கிட்டாங்க போலன்னு நாங்க சொல்லல… ஊருக்குள்ள பேசிக்கிறாங்க.
YouTube video player

Exit mobile version