நீட் நுழைவுத் தேர்வுக்கான நேரம் மாற்றம் 

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நீட் நுழைவுத் தேர்வுக்கான நேரம் காலையிலிருந்து பிற்பகலுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு அடுத்த ஆண்டு மே 5ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க கடைசி நாள் 30ம் தேதி ஆகும். இந்த ஆண்டு நீட் தேர்வு, காலை, 10:00 மணி முதல், 1:00 மணி வரை நடைபெற்றது. ஆனால், 2019க்கான தேர்வு நேரம், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை என மாற்றப்பட்டுள்ளது. மேலும் சில புதிய கட்டுபாடுகளையும் சி.பி.எஸ்.இ விதித்துள்ளது. அதன்படி ஆன்லைன் விண்ணப்ப பதிவின் போது, பெற்றோரின் கல்வித்தகுதி, தொழில் மற்றும் வருமானம் குறிப்பிட வேண்டும். தேர்வு வருகை பதிவேட்டில் கையெழுத்திடும் போது, விரல் ரேகையையும் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது.

 

Exit mobile version