முதுகலை நீட் நுழைவு தேர்வுகள் 4 மாதங்கள் ஒத்திவைப்பு

எம்.பி.பி.எஸ். இறுதி ஆண்டு பயிலும் மாணவ மாணவிகள் கொரோனா சிகிச்சை பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பிரதமரின் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் எம்பிபிஎஸ் மருத்துவ படிப்பு பயிலும் இறுதி ஆண்டு மாணவ மாணவிகள் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்கள் என்றும், மருத்துவ பேராசிரியர்கள் கண்காணிப்பில் அவர்கள் இந்த பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், பிஎஸ்சி செவிலியர் படிப்பு பயிலும் மாணவ மாணவிகள் முழு நேர கொரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இத்தகைய பணிகளில் ஈடுபடுவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்படும் எனவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

மேலும், இதன் காரணமாக முதுகலை நீட் நுழைவு தேர்வுகள் 4 மாதங்கள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 100 நாட்கள் இப்பணியில் ஈடுபடுவர்களுக்கு அரசுப் பணியிடங்களில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version