நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், நீட் தேர்வை திட்டமிட்டபடி நடத்துவதா? வேண்டாமா? என்பதை குறித்து வல்லுநர் குழு இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறது.பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான J.E.E, நீட் நுழைவுத்தேர்வுகள் இம்மாத இறுதியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, J.E.E மற்றும் நீட் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார். தேசிய தேர்வுகள் முகமை அதிகாரிகள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பின்னர் தேர்வுகளை நடத்துவது தொடர்பான அறிக்கையை மத்திய அரசிடம் வல்லுநர் குழு வழங்க உள்ளது.
நீட், JEE தேர்வுகளை நடத்துவது குறித்து ஆலோசிக்க குழு அமைப்பு!
-
By Web Team
Related Content
இனி விடியா ஆட்சியில நீட் ஒழிப்பே கிடையாது!
By
Web team
September 7, 2023
கல்லூரியில் சேராத மாணவர்கள் ஒரு வருசத்துக்கு நீட் எழுத முடியாது.. என்னங்க சொல்றீங்க!
By
Web team
July 21, 2023
நீட் ரத்து என்று சொன்னது வெத்து வாக்குறுதி தானா?.. அரசுப்பள்ளி மாணவர்கள் அவதி!
By
Web team
May 3, 2023
மருத்துவக் கல்வியில் சீர்திருத்தம் அவசியம் - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட்!
By
Web team
February 28, 2023