நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் சரணடைந்த இர்பானை 10 நாள் நீதிமன்றக் காவலில் வைக்க தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்ற நீதிபதி பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்…
நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் இர்பானை காவல் துறையினர் தேடி வந்த நிலையில் அவர், சேலம் நிதிமன்றத்தில் சரணடைந்தார். இந்நிலையில் நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் இர்பானை, சிபிசிஐடி காவல்துறையினர் ஒருநாள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்தனர்.பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தினர். இதனையடுத்து, இர்பானை 10 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.