நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
நீட் தேர்வு ஆள்மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடமும் விசாரணை நடத்த வேண்டும் என்றும், விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம், சிபிசிஐடிக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, ஆள் மாறாட்டம் வழக்கு தொடர்பாக, சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினர் ஆஜராக வேண்டும் என சிபிசிஐடி அதிகாரிகள் சம்மன் அளித்தனர்.
அதன்படி ஆஜரான, கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினர் 15 பேரிடம், சிபிசிஐடி அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் சிபிசிஐடி அதிகாரிகள் தொடர்ந்து 8 மணி நேரம் விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து கல்லூரிகளின் சான்றிதழ் சரிபார்ப்பு குழுவினரிடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அனைத்தையும் அறிக்கையாக தயார் செய்து, தேனி மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் இன்று தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.