நீட் ஹால் டிக்கெட்களை 15ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம்

நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள், தங்களது நுழைவுச் சீட்டுகளை 15ஆம் தேதி முதல் இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5ஆம் தேதி நடைபெறுகிறது. இத்தேர்வுக்கு நாடு முழுவதும் இருந்து 15 லட்சத்து 19 ஆயிரம் பேரும், தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்து 40 ஆயிரம் பேரும் விண்ணப்பித்தனர்.

தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை, வரும் 15ஆம் தேதி முதல் www.nta.ac.in மற்றும் www.ntaneet.nic.in ஆகிய இணையதளங்களில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது ஆகிய 11 மொழிகளில் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version