நீட் தேர்வு ஆள்மாறாட்ட முறைகேடு விவகாரம்: இர்ஃபானை சஸ்பென்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவு

நீட் தேர்வு ஆள் மாறாட்ட முறைகேடு விவகாரத்தில் தருமபுரி மருத்துவக்கல்லூரி மாணவன் முகமது இர்ஃபானை சஸ்பென்ட் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் வழிகாட்டுதலின் படி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி டீன் சீனிவாச ராஜுலு, மாணவன் முகமது இர்பானை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறார். உத்தரவு கடிதத்தினை இர்பான் வீட்டுக்கு அனுப்பியுள்ளதாக டீன் தெரிவித்துள்ளார். முகமது இர்பான் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை தருமபுரி மருத்துவக்கல்லூரிக்கு வந்ததாகவும், அதற்கான வருகை பதிவேடு இருப்பதாகவும் டீன் சீனிவாசராஜூலு தெரிவித்திருந்தார். சிபிசிஐடி காவல்துறை இர்பானை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், நேற்று இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version