நீட் ஆள்மாறாட்டம் : மாணவன் பிரவீனுக்கு 1 5 நாட்கள் நீதிமன்றக் காவல்

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவன் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

 நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து எஸ்ஆர்எம் மருத்துவ கல்லூரியில் சேர்ந்த மாணவன் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் தேனி மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆஜர்படுத்தப்பட்ட மாணவன் பிரவீன் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகிய இருவரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். நீதிபதியின் உத்தரவை அடுத்து இருவரும், தேனி மாவட்ட தேக்கம்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக கூறப்படும் மாணவன் ராகுல், மாணவி அபிராமி மற்றும் அவர்களது பெற்றோர்களிடம் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த, தேனி மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்டேஷ் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version