நீட் தேர்வு ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டது!!

நாடு முழுவதும், செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த நிலையில், திட்டமிட்டபடி தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்தது. செப்டம்பர் 13ம் தேதி நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 16 லட்சம் மாணவர்கள் இத்தேர்வை எழுதுகின்றனர். ntaneet.nic.in என்ற இணையதளத்தில் இருந்து, ஹால்டிக்கெட்களை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version