நீட் முறைகேடு; இடைத்தரகர் கைது

நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கில் இடைத்தரகராக செயல்பட்ட கோவிந்தராஜ் என்பவரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர்.

நீர் தேர்வு ஆள்மாறட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள உதித்சூர்யா, பிரவின், ராகுல் மற்றும் அவர்களது தந்தைகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஆள்மாறட்ட வழக்கில் இர்பானின் தந்தை முகமது ஷபியை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்தனர். அவர் அளித்த தகவலின் பேரில் ஆள்மாறாட்டம் செய்வதற்கு இடைத்தரகராக செயல்பட்ட கோவிந்தராஜ் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். திருப்பத்தூரில் பதுங்கி இருந்த அவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். இந்நிலையில் மொரிஷியஸ் தப்பிச் சென்றதாகக் கருதப்பட்ட தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் இர்பான் வேலூரில் சரணடைந்தர். அவரிடம் விசாரணை நடத்திய நீதிபதி அக்டோபர் 9ஆம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Exit mobile version