தமிழகத்தில் நாளை முதல் நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 413 இலவச நீட் பயிற்சி மையங்களில் நாளை முதல், பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன. குஜராத்தைச் சேர்ந்த ஈட்டூஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவியுடன், அரசு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
காலாண்டுத் தேர்வு விடுமுறையில், தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. நாளை முதல் செப்டம்பர் 28 ஆம் தேதி வரை பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் எனவும், அதன் பிறகு வார இறுதி நாட்களில் மட்டும் பயிற்சி அளிக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. காலை 9 முப்பது மணி முதல் நண்பகல் 12 நாற்பது மணி வரையிலும், பிற்பகலில், 1.10 மணி முதல் மாலை 4.20 மணி வரையிலும் நீட் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன.