வருடத்திற்கு 2 முறை நீட் தேர்வு?

நீட் தேர்வை ஆண்டுக்கு 2 முறை நடத்த மத்திய சுகாதார துறைக்கு, தேசிய தேர்வு முகமை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் தற்போது ஆண்டுக்கு சுமார் 11 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதி வருகின்றனர். நீட் தேர்வு எழுதும் போது, மாணவர்கள் சந்திக்கும் சிரமங்களை களைய தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளது. அதன்படி ஆண்டுக்கு 2 முறை நீட் தேர்வு நடத்த அனுமதிக்க கோரி மத்திய சுகாதார துறைக்கு தேசிய தேர்வு முகமை கடிதம் வாயிலாக பரிந்துரைத்துள்ளது. மேலும், நீட் தேர்வினை ஆன்லைன் வழியே நடத்துவது குறித்தும் தேசிய தேர்வு முகமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Exit mobile version