டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசுக்கு, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
வடகிழக்கு டெல்லியில் இருதரப்பினர் இடையே நடைபெற்ற மோதலால் அங்கு தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. வன்முறை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும், வடகிழக்கு டெல்லி பகுதிகளில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. இந்நிலையில் ஜோகிர்புர், பாபர்புர், மவுஜ்புர் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். மேலும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பு காவல் ஆணையர் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்ட அதிகாரிகள், ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டும் நிலைமை கட்டுக்குள் வரவில்லை என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனவும், ராணுவம் வரவழைக்கப்பட வேண்டும் என்றும் கெஜ்ரிவால் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.