விருதுநகர் அருகே, கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கொள்ளை முயற்சி தோல்வி அடைந்ததால், 2 கோடி மதிப்பிலான பணம் மற்றும் நகைகள் தப்பின.

சாத்தூர் அருகே புல்வாய் பட்டியில் உள்ள கஞ்சம்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு செயல்பட்டு வருகிறது இதன் அருகில் கூட்டுறவு பண்டகசாலை உள்ளது. பண்டக சாலையை திறக்க வந்த ஊழியர் வங்கியின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து வங்கியின் செயலாளருக்கு தகவல் கொடுத்தார். இது தொடர்பான புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். வங்கியின் கதவை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள், லாக்கரை உடைக்க முடியாமல் திரும்பிச் சென்றுள்ளனர். அலாரம் அடிக்கும் சத்தம் கேட்காமல் இருக்க ஒலிபெருக்கியில் மைதா மாவை அடைத்து விட்டு அவர்கள் திருட முயற்சித்தது தெரிய வந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் உள்ள 2 கோடி மதிப்பிலான நகை, பணம் தப்பியது.

Exit mobile version