ஆந்திராவில் மகாநந்தி சிவன் கோவிலை சூழ்ந்த வெள்ளம்

ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் மகாநந்தி சிவன் கோவிலை வெள்ளம் சூழ்ந்தது.

கர்னூல் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளம் சூழ்ந்து பாதிப்படைந்துள்ளது. இந்தநிலையில், மகாநந்தி சிவன் கோவில், பஞ்சலிங்கேஸ்வரர் மண்டபம் தண்ணீரால் சூழப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்குள் சூழ்ந்துள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version