தமிழகத்தில் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 14 லட்சம் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.
தமிழக நீதிமன்றங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் குறித்த விவரங்களை தேசிய நீதித்துறை தரவு அட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 308 சிவில் வழக்குகளும், 41 ஆயிரத்து 277 குற்றவியல் வழக்குகளும் நிலுவையில் உள்ளன.
மாநிலம் முழுவதும் உள்ள கீழமை நீதிமன்றங்களில் சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் உட்பட மொத்தம் 10 லட்சத்து 98 ஆயிரத்து 063 வழக்குகள் தேக்கமடைந்துள்ளன. நீதிபதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதே வழக்குகள் தேக்கத்திற்கு காரணமாக கூறப்படுகிறது. தேங்கிக் கிடக்கும் வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.