இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7 ஆர் என்ற புதிய செயற்கைகோளை உருவாக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக, இஸ்ரோவுடன், 1,589 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை கையெழுத்திட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை தொடர்பில் வைத்திருக்கவும், அவை, கரையில் உள்ள செயல்பாட்டு மையங்களுடன் தொடர்பில் இருக்கவும் ஜிசாட்-7ஆர் உதவும்.
2013 ஆம் ஆண்டு கடற்படைக்காக முதல் ஜிசாட்-7 என்ற செயற்கைகோளை இந்தியா விண்ணில் ஏவியது குறிப்பிடத்தக்கது.