திண்டுக்கல் மாவட்டத்தில் சில வாரங்களாக நல்ல மழை பெய்து வரும் நிலையில், இயற்கை முறையில் ரோஜா நடவு பணிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
காய்கறி, பழ சாகுபடி போலவே ஆண்டு முழுவதும் சீரான வருவாயை கொடுப்பது மலர் சாகுபடி. இதனால் விவசாயிகள் பலர் மலர் சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தினசரி வருவாய் ஈட்ட விரும்பும் விவசாயிகளுக்கு மலர் சாகுபடி வரப்பிரசாதமாக உள்ளது. இந்த வரிசையில் திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி, கோவிலூர், புகையிலைப்பட்டி ஆகிய பகுதிகளில் ரோஜா மலர்
சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நல்ல மழை பெய்து வருவதால் ஏக்கருக்கு, 2 ஆயிரம் செடிகள் வரை நடவு செய்வதன் மூலம் ஒரு செடி 10 முதல் 12 ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதனால் பன்னீர் ரோஜா, பட்டன் ரோஸ், முக்குத்தி ரோஸ் என அழைக்கப்படும் சிகப்பு ரோஜா செடிகளை விவசாயிகள் ஆர்வத்துடன் நடவு செய்யும் பணிகளில்
ஈடுபட்டுள்ளனர்.