இயற்கை சார்ந்த பொருட்களின் அவசியம் குறித்து மதுரை மாநகராட்சியின் சார்பில் 3 நாட்கள் கண்காட்சி தொடங்கியுள்ளது.
மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநகராட்சி சார்பில் இயற்கை கண்காட்சி 3 நாட்களுக்கு நடைபெறுகிறது. கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ராஜசேகர் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். கண்காட்சியில் மழைநீர் சேகரிப்பு, திடக்கழிவு மேலாண்மை, இயற்கை சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளை மதுரை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கண்காட்சியில் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. 3 நாட்களுக்கு நடைபெறும் கண்காட்சியை பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் பார்த்து பயன்பெற மாநகராட்சி நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.