திருப்பரங்குன்றம் பகுதியில் இயற்கை முறை சாகுபடியால் பயிரிடப்படும் வெண்டைக்காய்க்கு நல்ல விலை கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் சுற்றுவட்டார பகுதியான, அவனியாபுரம், பரமப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் வெண்டைக்காய் சாகுபடி செய்துள்ளனர். இதே பகுதியை சேர்ந்த விவசாயி ராஜா என்பவர், ஒரு ஏக்கர் பரப்பளவில் வெண்டைக்காய் சாகுபடி செய்து வருகிறார். ரசாயன உரங்கள், மருந்துகளை தவிர்த்து இயற்கை முறையில் பயிரிட்டுள்ளார்.
குறைந்த அளவிலான தண்ணீரை பயன்படுத்தி அதிக விளைச்சலை பெறுவதாகவும், வெண்டைக்காய் ஒரு கிலோவிற்கு 40 ரூபாய் வரை கிடைப்பதால் நல்ல லாபம் கிடப்பதாகவும் ராஜா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இயற்கை முறையை பயன்படுத்தி அனைத்து விவசாயிகளும் பயன்பெற வேண்டும் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.