பாக்கு மரத்தில் ஏற புதிய இயந்திரம் கண்டுபிடிப்பு: விவசாயி சாதனை

பாக்கு மரத்தில் சுலபமாக ஏற உதவும் இயந்திரத்தை கர்நாடகாவை சேர்ந்த விவசாயி ஒருவர் கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

சராசரியாக ஒரு பாக்கு மரம் 100 அடி உயரம் வரை வளரக்கூடியதாகும். சமீப காலமாக பாக்கு மரத்தில் ஏறி பாக்குகளை பறிப்பதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை. இதனால் பாக்கு விவசாயத்தை மேற்கொள்ள பலரும் தயங்குகின்றனர். இந்தநிலையில் கர்நாடகா மாநிலம் மங்களூரை அடுத்த பந்த்வாலை சேர்ந்த கணபதி என்ற விவசாயி, பாக்கு மரத்தில் ஏறுவதற்கான புதிய இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இதன் மூலம் பாக்கு மரத்தில் எளிதில் ஏறி பாக்குகளை பறிக்க முடியும்.

பாக்கு மரத்தில் விவசாயி ஒருவர் பாரம்பரிய முறையில் ஏறி பாக்குகளை பறிக்க 8 நிமிடம் ஆகும். ஆனால் இந்த இயந்திரத்தை பயன்படுத்தி வெறும் ஒரு நிமிடத்திற்கு குறைவான நேரத்தில் பாக்குகளை பறிக்க முடியும். ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 100 மரங்கள் வரை ஏறலாம் என்பதால் விவசாயிகளுக்கு 4 ஆயிரம் ரூபாய் வரை மிச்சமாகும் என கணபதி தெரிவித்துள்ளார்.

Exit mobile version