நாமக்கல்லில் ரசாயன உரங்களுக்கு முடிவுக்கட்டும் வகையில் இயற்கை உரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விவசாயம் செய்வதற்காக இயற்கை உரங்களுக்கு பதிலாக செயற்கை உரங்களை பயன்படுத்தும் போது, மண் வளம் குன்றுகிறது. இதனால் விளைச்சலும் குறைகிறது. இதற்கு முடிவுகட்டும் வகையில், பரமத்தி வேலூரில் ஆர்கானோ காம்ப்ளக்ஸ் என்ற இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இதில் சுத்திகரிக்கப்பட்ட பயோ கம்போஸ்ட், தாது மற்றும் நுண் சத்துக்கள் நிறைந்த மினரலுடன், அமிலத்தன்மை நீக்கப்பட்ட புண்ணாக்கு வகைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு, புதிய உயிரியல் தொழில்நுட்பத்தில் உரம் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் மண் பாதுகாக்கப்பட்டு, பலவகையான சத்துக்களை பெருக்கி கூடுதல் மகசூல்களை பெற முடியும் என இயற்கை உர உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.