தர்பூசணி சாகுபடியில் இயற்கை உரம்: விவசாயி மகிழ்ச்சி

தர்பூசணி சாகுபடியில் இயற்கை உரத்தை பயன்படுத்தி கரூர் மாவட்ட விவசாயி ஒருவர் நல்ல மகசூல் ஈட்டியுள்ளார்.

அரவக்குறிச்சியை அடுத்த தென்னிலை கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவர் தனது 8 ஏக்கர் நிலத்தில் தர்பூசணி சாகுபடி செய்துள்ளார். பஞ்சகாவ்யம், கடலை புண்ணாக்கு போன்ற இயற்கை ஊட்டச் சத்துக்களை மட்டுமே உரமாக பயன்படுத்தும் அவர், இதன் மூலம் மண் வளம் பெருகும் எனவும் குறிப்பிட்டார்.

60 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் தர்பூசணி வேனில் காலங்களில் மக்களுக்கு அருமருந்தாகவே உள்ளது. ஒரு டன் தர்பூசணி, 6 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை போவதாக தெரிவித்துள்ள விவசாயி சுந்தரமூர்த்தி, ஒரு ஏக்கரில் 20 டன் தர்பூசணி அறுவடை செய்யப்படுவதாக கூறியுள்ளார்.

Exit mobile version