மாட்டு சாணத்தை கொண்டு விவசாயம் செய்வதால் நல்ல மகசூல் கிடைப்பதுடன், உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவாகவும் அது அமைவதாக திருவண்ணாமலையை சேர்ந்த விவசாயி ஒருவர் கூறுகிறார்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், சுமார் 10 மாடுகளை வைத்து, நாள் ஒன்றிற்கு 30 லிட்டர் வரை பால் கொள்முதல் செய்கிறார். அந்த மாடுகளின் சாணத்தை, அவருடைய விவசாய நிலத்திற்கு உரமாக பயன்படுத்தி வருகிறார். இதனால் நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நோய் பாதிப்பு குறைவாக உள்ளது என்றும் கூறுகிறார். இந்த சாணம், 1 டன், ஆயிரத்து 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கிறார். வருடத்திற்கு 15 டன் வரையிலான சாணத்தை தேக்கி வைத்து, அவர் நிலத்திற்கு 5 டன்னை பயன்படுத்தி, மீதத்தை, விவசாயிகளுக்கு விற்பனை செய்து வருகிறார். இதன் மூலம் வருடத்திற்கு 12 ஆயிரம் வரை லாபம் கிடைப்பதாக அந்த விவசாயி மகிழ்ச்சி தெரிவிக்கிறார்.