இயற்கையோடு இணைந்து விவசாயம் செய்து ஊடு பயிரிட்டு விவசாயம் செய்வதால் நஷ்டம் ஏற்படவில்லை என விவசாயி தெரிவித்துள்ளார்
தேனி மாவட்டம் போடியில் வங்கியில் துணை மேலாளராக பணியாற்றிவர் முத்துவேல் பாண்டியன், மாமரங்களை கவாத்து செய்து, தனது நிலத்தில் சூரிய ஒளி படும்படி செய்து தென்னை, வாழை, எழுமிச்சை, பப்பாளி, உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக பயிரிட்டு உரங்களை ஊடுபயிராக பயிரிட்டு, இதற்கான உரங்களை தோப்பில் விழும் சருகுகள் வேப்பம் பிண்ணாக்கு, பசுஞ்சானம் உள்ளிட்டவற்றை பசுமாட்டின் கோமியத்தில் பதப்படுத்தி வடிகட்டி தெளிப்பானாகவும், மண்புழு உரம் தயாரித்து இயற்கையோடு இணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக ஊடுபயிர் செய்து ஆண்டு முழுவதும் வருமானம் என தான் பணிபுரிந்த வங்கியைப்போல தனது தோப்பையும் ஆண்டு முழுவதும் வருமானம் உள்ளதாக மாற்றி சாதனை புரிந்துள்ளார். மேலும் விவசாயிகள் ரசாயண உரத்தை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்தால் நஷ்டம் ஏற்படாது என்று குறிப்பிட்டார்.