பொள்ளாச்சி சொலவம் பாளையத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் படிக்கும் போதே நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபட்டு முன்னுதாரணமாக திகழ்கிறார்.
கோவை தனியார் கல்லூரியில் படித்து வரும் அருண் விக்ரம், சிறுவயதிலிருந்தே நாட்டுக்கோழி வளர்ப்பில் ஆர்வம் காட்டி வந்துள்ளார். இதனால் இவருடைய பெற்றோர் கல்லூரியில் சேர்ந்த போதே ஒரு ஜோடி நாட்டுக் கோழிகளை வாங்கி கொடுத்துள்ளனர். அவற்றை அருண் விக்ரம் மிகவும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்ததன் காரணமாக ஒரே வருடத்தில் அவற்றின் எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக பெருகியுள்ளது. இதனால் ஒரு மாதத்திற்கு அருண் விக்ரம் சராசரியாக 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதித்து வருகிறார்.