ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பாருக் அப்துல்லாஹ், மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரம் காட்டி வருகிறார். இதன் ஒருபகுதியாக சோனியா காந்தி, ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனிடையே ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக திமுக தலைவர் ஸ்டாலின் முன்மொழிந்தது மம்தா பானர்ஜி உள்ளிட்டோரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மம்தா பானர்ஜி தனி அணியாக செயல்பட கூடும் என கூறப்படுகிறது. இந்தநிலையில் மேற்கு வங்கம் சென்று இருக்கும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாஹ், ஹவுராவில் அம்மாநில முதலமைச்சர் மமதா பானர்ஜியை சந்தித்து பேசியிருப்பது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.