அரியானாவில் பெரும்பான்மையை வெல்ல முடியாத தேசிய கட்சிகள்

அரியானாவில் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் யார் ஆட்சியமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியை துஷ்யந்த் சவுதாலா தலைமையிலான ஜனநாயக ஜனதாக் கட்சி பெற்றுள்ளது.

அரியானா மாநிலத்தில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளில் ஆட்சியமைக்க 46 தொகுதிகள் தேவைப்படுகிறது. ஆளுங்கட்சியான பாஜகவும் எதிர்க்கட்சியான காங்கிரசும் நாற்பதுக்குக் குறைவான இடங்களையே பெறும் நிலையில் உள்ளன. இந்திய தேசிய லோக் தளத்தில் இருந்து பிரிந்து புதிய கட்சியாக உருவெடுத்த ஜனநாயக ஜனதாக் கட்சி பத்து இடங்களைக் கைப்பற்றி மூன்றாவது பெரும் கட்சியாக உள்ளது.

பதிவான மொத்த வாக்குகளில் 28 விழுக்காட்டைப் பெற்றுள்ள ஜனநாயக ஜனதாக் கட்சி, யார் ஆட்சியமைப்பது என்பதைத் தீர்மானிக்கும் சக்தியாகத் திகழ்கிறது. எனினும் முடிவுகள் முழுவதும் வெளிவந்த பிறகே தமது நிலைப்பாட்டைக் கூற முடியும் என அந்தக் கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

Exit mobile version