உதகை தாவரவியல் பூங்காவில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் மூலம் தேசிய ஊட்டச்சத்து மாதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் சமூக நலத்துறையின் சார்பில் போஷன் அபியான் எனப்படும் தேசிய ஊட்டச்சத்து மாதம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.
அதன்படி உதகை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் செப்டம்பர் மாதம் முழுவதும் ‘போஷன் அபியான்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதில் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தாவரவியல் பூங்காவில் அங்கன்வாடி ஊழியர்கள் சார்பில் பெண்கள், குழந்தைகளை ஊட்டச்சத்து குறைபாடுகளில் இருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.