கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் துவக்கம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் துவங்கியுள்ளன. முதல்நாள் போட்டியில் டெல்லி, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கோவில்பட்டி கிருஷ்ணாநகரில் உள்ள செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானத்தில் 11வது அகில இந்திய அளவிலான ஹாக்கி போட்டிகள் துவங்கியுள்ளன. 11 நாட்கள் நடைபெறவுள்ள இந்த போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 16 அணிகள் பங்கேற்றுள்ளன.கே.ஆர்.மருத்துவம் மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில், கே.ஆர்.கல்வி நிறுவனங்கள், லட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி இணைந்து லட்சுமி அம்மாள் நினைவு சுழற்கோப்பைக்காக இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. வரும் 26ம் தேதிவரை பகல் இரவு ஆட்டங்களாக இந்த போட்டிகள் நடைபெற உள்ளன.

தொடக்க நாள் ஆட்டத்தில் கோவில்பட்டி இலட்சுமி அம்மாள் ஸ்போர்ட்ஸ் அகாடமி அணி மற்றும் நியூடெல்லி நேஷனல் ஹாக்கி அகாடமி அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 3 கோல் போட்டு வெற்றி பெற்றது. இதேபோல நடைபெற்ற மேலும் இரு போட்டிகளில் பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் வெற்றி பெற்றன.

Exit mobile version